நண்பர்கள்
என்ன ? எங்கே? எப்படி? - எதற்காக??
எதற்காக இந்த தளம் என்பதை கண்டிப்பாக சொல்லியாகவேண்டும்.. அன்றாட வாழ்க்கையில், நமக்கு எவ்வளவோ தகவல்கள் தேவைப்படுகிறது. அந்தத்தகவல்களை நம்முடைய- அல்லது நண்பர்களின்- அனுபவங்களின் மூலமாக தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
“இந்த உலகத்தில் நமக்கு தெரியாதவர்கள் என்று யாரும் கிடையாது.. அவர்கள் எல்லோரும் இதுவரை நாம் சந்திக்காத நண்பர்களே” என்று ’வாழ்த்துக்கள்’ திரைப்படத்தில் சொல்வார்கள்.
அவ்வளவுதான் விஷயம்! எல்லோருடைய தகவல்களையும் ஒன்றிணைப்பதே இந்த தளத்தின் முக்கியப்பணி! அது, வேலைவாய்ப்புத்தகவல், வீட்டுமனை விற்பனையிலிருந்து தொடங்கி பள்ளி/கல்லூரி தேர்ந்தெடுப்பது,புதுக்கணினி வாங்குதல், பட்டுப்புடவை வாங்குதல் வரை இணையத்தில் சிதறிக்கிடக்கும் தகவல்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்க விருப்பம்.
Plagiarism/காப்புரிமை பிரச்சினைகள் வராமலிருக்க தளத்தின்/ஆசிரியரின் பெயரை லிங்க்-உடன் இணைப்பதாக உத்தேசித்துள்ளேன்... ஆட்சேபம் இருந்தால், தயவுசெய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
’ஏன்? எதற்கு?’ என்ற கேள்விகளுக்கு இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பதில் கிடைக்கும்.. ‘என்ன ? எங்கே? எப்படி?’ ஆகியவற்றுக்கு, அனுபவத்தின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தத்தளம் அதனைப்பூர்த்தி செய்யும் விதமாக - படித்தது, பார்த்தது, மற்றவர்கள் சொல்ல (நான்) அறிந்தது என இயன்ற அளவு நம்பகத்தன்மையுடன் தர முயல்கிறேன்..
தேடுபொறியில் தேடாமல், எ3 - யில் தேடினால், எதாவது உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்பது ஒரு சிறு லட்சியம்...
உங்களுடைய ஆதரவும் முக்கியம்!
நன்றி சந்திப்போம் மீண்டும்!
(மேலும் வளரும்)
7:49 AM
|
Labels:
E3,
Introduction,
இணையத்தகவல்கள் சங்கமம்
|
0 comments:
Post a Comment