நண்பர்கள்
குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் சாப்ட்வேர்...
இந்தக்காலத்து குழந்தைகள் மிக வேகமாக எதையும் கற்றுக்கொள்கிறார்கள். பிறர் பேசுவதை கவனிக்கத்தொடங்குவதிலிருந்து, அழகாக பேசவும்கற்றுக்கொள்கிறார்கள்.
அதுவும் பெண்பிள்ளைகள், சொல்லவே வேண்டாம், அவர்களுடைய அம்மாக்களைவிட அதிகம்பேசுகிறார்கள்..;)
ஸ்ரீ-யும் அப்படித்தான்! நன்றாக கவனிக்கிறாள்.. சிற்சில சமயங்களில் ஏதேதோ பேச முயல்கிறாள். நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதாகத்தோன்றுகிறது.. குழந்தைகளுக்கு கற்றுத்தரும் புத்தகம் அல்லது குறுவட்டு அரிதாகத்தான் இருக்கிறது (தமிழ்/ஆங்கில குழந்தைப்பாடல்கள் இணையத்திலும் குறுவட்டுக்களாகவும் ஏராளமாக இருக்கின்றன.. பிகேபி அவர்களின் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட “சாய்ந்தாடம்மா.. சாய்ந்தாடு” என்ற பாடல்தான் ஸ்ரீ-யின் ஃபேவரைட்!)
ஐந்து வயதிற்குள் குழந்தைகள் கற்பதைப்பொறுத்து அவர்களுடைய திறன் அமையுமாம். அதனால், அவளுக்கென கற்றுத்தரும் புத்தகம் அல்லது குறுவட்டு என்று ஏதேனும் கிடைக்கிறதா என தேடிக்கொண்டேயிருப்பேன்..
அலுவலக நண்பரிடம் விசாரித்ததற்கு, சில வீடியோ குறுவட்டுக்களை பரிந்துரைத்தார். குழந்தைகளின் வயதிற்கேற்ப வேறுவேறு செட் உள்ளது... 1 வயது குழந்தையெனில், வண்ணம் மற்றும் வடிவம் கற்றுக்கொள்ளுதல், 2-3 வயதெனில் இடது மூளை (Logical & Analytical Thinking) மற்றும் வலது மூளை(Creative &Aesthetics) ஆகியவற்றுக்கு தனித்தனி பயிற்சி.. அதாவது, வரையும் மென்பொருள், கணக்கு,ரைம்ஸ் பாடல்கள் என்று எல்லாம் வைத்திருப்பார்கள்.
லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோது, சில சிடிக்கள் கிடைத்தது.. Brainy Baby, Baby Einstein (பேரு சூப்பரா இல்லை?!!). Brainy Baby For 1-5yrs (Rs.599) மட்டும் இப்போதைக்கு வாங்கினேன். ஸ்ரீ-க்கு இரண்டு வயது ஆகும்பொழுது, பிரபல Baby Einstein வாங்கிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். வளர வளர அபாகஸ் எல்லாம் கற்றுக்கொடுக்க ஆசை!
உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் சொல்லுங்களேன்... பபாஸி நடத்தும் 33-வது புத்தகக்காட்சியில் (டிச 10 - ஜன 10) , குழந்தைகளுக்கான கற்கும் சிடிக்கள் ஏராளமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கீழே தகவல் பட்டியல்
- Brainy Baby (4 DVDs/12DVDs) - Many Awards
- Baby Einstein - இதுவும் பிரபலமானதுதான் (ஆதாரம்: இங்கே)
(தொடர்ந்து வளரும்..)
8:39 AM
|
Labels:
Baby Einstein,
Brainy Baby,
Children Learning Kit,
Kids
|
0 comments:
Post a Comment