நண்பர்கள்
குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் சாப்ட்வேர்...
இந்தக்காலத்து குழந்தைகள் மிக வேகமாக எதையும் கற்றுக்கொள்கிறார்கள். பிறர் பேசுவதை கவனிக்கத்தொடங்குவதிலிருந்து, அழகாக பேசவும்கற்றுக்கொள்கிறார்கள்.
அதுவும் பெண்பிள்ளைகள், சொல்லவே வேண்டாம், அவர்களுடைய அம்மாக்களைவிட அதிகம்பேசுகிறார்கள்..;)
ஸ்ரீ-யும் அப்படித்தான்! நன்றாக கவனிக்கிறாள்.. சிற்சில சமயங்களில் ஏதேதோ பேச முயல்கிறாள். நிறைய கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருப்பதாகத்தோன்றுகிறது.. குழந்தைகளுக்கு கற்றுத்தரும் புத்தகம் அல்லது குறுவட்டு அரிதாகத்தான் இருக்கிறது (தமிழ்/ஆங்கில குழந்தைப்பாடல்கள் இணையத்திலும் குறுவட்டுக்களாகவும் ஏராளமாக இருக்கின்றன.. பிகேபி அவர்களின் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட “சாய்ந்தாடம்மா.. சாய்ந்தாடு” என்ற பாடல்தான் ஸ்ரீ-யின் ஃபேவரைட்!)
ஐந்து வயதிற்குள் குழந்தைகள் கற்பதைப்பொறுத்து அவர்களுடைய திறன் அமையுமாம். அதனால், அவளுக்கென கற்றுத்தரும் புத்தகம் அல்லது குறுவட்டு என்று ஏதேனும் கிடைக்கிறதா என தேடிக்கொண்டேயிருப்பேன்..
அலுவலக நண்பரிடம் விசாரித்ததற்கு, சில வீடியோ குறுவட்டுக்களை பரிந்துரைத்தார். குழந்தைகளின் வயதிற்கேற்ப வேறுவேறு செட் உள்ளது... 1 வயது குழந்தையெனில், வண்ணம் மற்றும் வடிவம் கற்றுக்கொள்ளுதல், 2-3 வயதெனில் இடது மூளை (Logical & Analytical Thinking) மற்றும் வலது மூளை(Creative &Aesthetics) ஆகியவற்றுக்கு தனித்தனி பயிற்சி.. அதாவது, வரையும் மென்பொருள், கணக்கு,ரைம்ஸ் பாடல்கள் என்று எல்லாம் வைத்திருப்பார்கள்.
லேண்ட்மார்க்கில் தேடிக்கொண்டிருந்தபோது, சில சிடிக்கள் கிடைத்தது.. Brainy Baby, Baby Einstein (பேரு சூப்பரா இல்லை?!!). Brainy Baby For 1-5yrs (Rs.599) மட்டும் இப்போதைக்கு வாங்கினேன். ஸ்ரீ-க்கு இரண்டு வயது ஆகும்பொழுது, பிரபல Baby Einstein வாங்கிக்கொள்ளலாம் என்றிருக்கிறேன். வளர வளர அபாகஸ் எல்லாம் கற்றுக்கொடுக்க ஆசை!
உங்களுக்குத் தெரிந்த தகவல்களையும் சொல்லுங்களேன்... பபாஸி நடத்தும் 33-வது புத்தகக்காட்சியில் (டிச 10 - ஜன 10) , குழந்தைகளுக்கான கற்கும் சிடிக்கள் ஏராளமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
கீழே தகவல் பட்டியல்
- Brainy Baby (4 DVDs/12DVDs) - Many Awards
- Baby Einstein - இதுவும் பிரபலமானதுதான் (ஆதாரம்: இங்கே)
(தொடர்ந்து வளரும்..)
8:39 AM | Labels: Baby Einstein, Brainy Baby, Children Learning Kit, Kids | 0 Comments
Datawarehousing மற்றும் Business Intelligence(BI) வகுப்புகள் சென்னையில் எங்கே?
அடுத்த தலைமுறை துறைகளாக சொல்லப்படுகின்ற டேட்டா வேர்ஹவுஸிங் மற்றும் பிஸினஸ் இன்டெலிஜன்ஸ் (Datawarehousing & Business Intelligence),டேட்டா மைனிங் (Data Mining), சென்னையில் எங்கெங்கே கற்பிக்கப்படுகின்றது என்பதற்கு யாராவது தகவல் தெரிந்தால் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
சிறு தகவலாக தெரிந்து வைத்திருந்தாலும் சொல்லவும் (உதா. பேருந்தில் பயணிப்பவர்களுக்கு, தடம் எண் முதலியன!) .பின்னூட்டத்தில், தகவல்களை இட்டால், இந்தப்பதிவிலேயே பின்னூட்டமிட்டவரின் பெயருடன் தகவலை வெளியிடுகிறேன்! நன்றி!
தகவல் பட்டியல்
(தொடர்ந்து வளரும்)
11:50 AM | Labels: BI, Business Intelligence, Cognos, Data Mining, Data Warehousing, SAS | 0 Comments
இணையத்தில் சம்பாதிக்க - சில வழிமுறைகள் !
’எங்களிடம் ரூ.500 கட்டுங்கள். உங்களுக்கான பணி மற்றும் பயிற்சிக்கான விவரங்களை அனுப்புகிறோம்’... இப்படி நிறைய விளம்பரம் தினம்தினம் நாளிதழ்களிலும், மாநகரப்பேருந்துகளிலும் பார்த்திருப்போம்..
அதேபோல, இணையத்திலும் ’ரூ.500 கட்டுங்கள் மாசம் 3000 ரூபாயில் வேலை’ என்பது போன்ற தளங்கள் உண்டு.
நம்பலாமா, வேண்டாமா என்று தொடர்ந்து பட்டிமன்றங்கள் நடக்கின்றன..
எடுத்த எடுப்பிலேயே சம்பளம் வேண்டும் என எதிர்பார்க்காமல்,’கொஞ்சம் பேர், அப்புறம் காசு, அடுத்து டில்லி (Oh my God!)’ என முன்னேறுபவர்களுக்கு, இருக்கவே இருக்கு - Crowdsourcing!
இதுபோன்ற தளங்களில் கொஞ்சம் ஈடுபாட்டுடன் பணிபுரிந்தாலே தக்க சம்பளம் அல்லது சன்மானம் கிடைக்கக்கூடும். அதுபற்றி நான் பதித்த கட்டுரை இங்கே!
கண்டிப்பாக சம்பளம் தருவோம் என்று அறிவித்துக்கொள்கிற தளங்களின் இணைப்புகள் கீழே:
- குரு
- 99டிசைன்ஸ்
- இன்னோசென்டிவ்
- அமேசான்.காம் : எம்-டர்க்
- டீசர்ட் டிசைனிங், வாசகங்கள் செய்தல். நல்ல டிசைன்களுக்கு/வாசங்களுக்கு சும்மா போய் வாக்களித்தாலும் பரிசுகள் (டீ-சர்ட் டிசைன் கற்றுகொள்ள)
- நல்ல பெயர் வைத்து சம்பாதிக்கலாம்
- ஐடியா சொல்லுங்க சன்மானம் வெல்லுங்க - 1
- ஐடியா சொல்லுங்க சன்மானம் வெல்லுங்க - 2
- பொதுவான சில பணிவாய்ப்புகள் மற்றும் கட்டுரைகள்
- 135 சிறு தொழில்களின் தொகுப்பு (கண்டிப்பாக வாசிக்கவேண்டிய ஒன்று)
- பணி அறிவிக்கும் ப்ளாக்
(தொடர்ந்து சேர்க்கப்படும்)
10:28 AM | Labels: Crowdsourcing, earn online, online business, Outsourcing | 0 Comments
என்ன ? எங்கே? எப்படி? - எதற்காக??
எதற்காக இந்த தளம் என்பதை கண்டிப்பாக சொல்லியாகவேண்டும்.. அன்றாட வாழ்க்கையில், நமக்கு எவ்வளவோ தகவல்கள் தேவைப்படுகிறது. அந்தத்தகவல்களை நம்முடைய- அல்லது நண்பர்களின்- அனுபவங்களின் மூலமாக தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
“இந்த உலகத்தில் நமக்கு தெரியாதவர்கள் என்று யாரும் கிடையாது.. அவர்கள் எல்லோரும் இதுவரை நாம் சந்திக்காத நண்பர்களே” என்று ’வாழ்த்துக்கள்’ திரைப்படத்தில் சொல்வார்கள்.
அவ்வளவுதான் விஷயம்! எல்லோருடைய தகவல்களையும் ஒன்றிணைப்பதே இந்த தளத்தின் முக்கியப்பணி! அது, வேலைவாய்ப்புத்தகவல், வீட்டுமனை விற்பனையிலிருந்து தொடங்கி பள்ளி/கல்லூரி தேர்ந்தெடுப்பது,புதுக்கணினி வாங்குதல், பட்டுப்புடவை வாங்குதல் வரை இணையத்தில் சிதறிக்கிடக்கும் தகவல்களை ஒரு குடையின்கீழ் ஒருங்கிணைக்க விருப்பம்.
Plagiarism/காப்புரிமை பிரச்சினைகள் வராமலிருக்க தளத்தின்/ஆசிரியரின் பெயரை லிங்க்-உடன் இணைப்பதாக உத்தேசித்துள்ளேன்... ஆட்சேபம் இருந்தால், தயவுசெய்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
’ஏன்? எதற்கு?’ என்ற கேள்விகளுக்கு இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் பதில் கிடைக்கும்.. ‘என்ன ? எங்கே? எப்படி?’ ஆகியவற்றுக்கு, அனுபவத்தின் மூலமாகத்தான் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தத்தளம் அதனைப்பூர்த்தி செய்யும் விதமாக - படித்தது, பார்த்தது, மற்றவர்கள் சொல்ல (நான்) அறிந்தது என இயன்ற அளவு நம்பகத்தன்மையுடன் தர முயல்கிறேன்..
தேடுபொறியில் தேடாமல், எ3 - யில் தேடினால், எதாவது உபயோகமான தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கவேண்டும் என்பது ஒரு சிறு லட்சியம்...
உங்களுடைய ஆதரவும் முக்கியம்!
நன்றி சந்திப்போம் மீண்டும்!
(மேலும் வளரும்)
7:49 AM | Labels: E3, Introduction, இணையத்தகவல்கள் சங்கமம் | 0 Comments